Sunday, December 27, 2020

வென்றிடுவோம் வா!


ஆக அனைத்தும்
கற்பிக்கப்பட்டது
இவ்வாண்டில்

போக போனதும்
மறக்கப்படுவோம்
வருமாண்டில்

நிழலோடும் இளைப்பாறும்
உதிர் இலையாய்
மலரோடு பசியாறும்
சிறு வண்டாய்

இனி யாவும்
புதிதாய்
சொல் யாவும்
செயலாய்
முயற்சி யாவும்
பலனாய்
பயன்பெறுவோம்
விழுதாய்
வென்றிடுவோம் வா!

No comments:

Post a Comment