Friday, February 27, 2015

குழந்தை தொழிலாளர்கள்!







குழந்தை தொழிலாளர்கள்


1098
குழந்தை தொழிலாளர்கள்
தடுப்பு மையம்
சுவரெல்லாம் சுவரொட்டி!
அதே சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கிறேன்
சினிமா சுவரொட்டியை…!

என்னிடம்
அறம் செய்ய விரும்பு!
என கூறாமல்
தொழில் செய் துரும்பாக!
என்றால் என் செய்வேன்…!

அறிவியலில் காந்த விசை
படிக்கும் நேரத்தில்
நானோ “நானோ” மகிழுந்தில்(car)
“தொழில் காந்தம்” போல்
ஓடோடிக் கொண்டிருக்கிறேன்…!
ஏழு வயதில் நான்
என்ன கண்டேன்?!
இன்றும் ஏழாமல் தொழிற்சாலையில்
முடங்கி திரிய?!

கனவு காணுங்குகள்
என்றார் அப்துல் கலாம்
ஏன் எனக்கு
இல்லையா கனவு?
கனவு வர உறக்கம்
வர வேண்டும் அல்லவா?

செய்தாளில் 10
குழந்தை தொழிலாளர்கள்
மீட்பு-அரசு அதிரடி
காலை 6 மணிக்கு
அவற்றை ஒவ்வொரு வீடாக
தூக்கி எறிந்தது நான்…!



அரசாங்கம் சொன்னது
அழையுங்கள்-குழந்தை
தொழிலாளர்களை ஒழிக்க
யவரும் முன்வரவில்லை
எங்களை  வேலைக்கு
அமர்த்தும் முதலாளிகளை
அழிக்க!

குழந்தையும் தெய்வமும்
ஒன்றா?-ஓஹோ
தெய்வதிலும் பிரிவினையா?
என் நண்பன் கான்வென்டில்!
நானோ இன்னும் குப்பைமேட்டில்!

ரஜினியின் புவனா
மட்டுமா கேள்விகுறி?
நானும் தான்..
என் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி
வைத்து எங்களை
முன்னேற வை!-அரசாங்கமே!

                           இவண்
                           குழந்தை தொழிலாளி..








No comments:

Post a Comment