Saturday, August 07, 2021

காலத்தின் கடமை

எனக்கான எழுதுகோலை 
ஏற்றெடுத்து 
ஏற்றம் இறக்கம் 
கண்காணித்து எனக்கென 
ஓர் இடம் தேட 
ஒருவேளை ஒய்யார 
வாழ்வை வாழ 
வாழ்வை இன்னும் 
கற்க வேண்டி 
கால தாமதத்தை 
காலம் காட்டுகிறதோ 
கடமையாக!

Tuesday, December 29, 2020

நிலா!


தனிமையில் 
நிலவும் நிலவும் 
நீயின்றி
நீள்கிறதே! 
நின்
துணையின்றி 
தேய்கிறதே!

Sunday, December 27, 2020

வென்றிடுவோம் வா!


ஆக அனைத்தும்
கற்பிக்கப்பட்டது
இவ்வாண்டில்

போக போனதும்
மறக்கப்படுவோம்
வருமாண்டில்

நிழலோடும் இளைப்பாறும்
உதிர் இலையாய்
மலரோடு பசியாறும்
சிறு வண்டாய்

இனி யாவும்
புதிதாய்
சொல் யாவும்
செயலாய்
முயற்சி யாவும்
பலனாய்
பயன்பெறுவோம்
விழுதாய்
வென்றிடுவோம் வா!

Tuesday, December 22, 2020

The Beautiful Lady

 



என்ன வென்பேன் எழுத்துக்கள்
ஏங்கே வென்பேன் உன்னை
நினைக்கையில் எழுதும் வரிகள்
யாவும் வெண்பா வென்பேன்
வெண்ணிலாவே என் இனிய
பொன் நிலாவே!

Back To Chennai

 



சென்னை மாநகர்

நிற்க
பல மாதங்களுக்கு
பிறகு
சென்னையில் நான்

நடக்க
அடுத்த கட்ட
திரைப் பயணம் தேடி

ஓட
சினிமா கனவுகளுடன்
இனிதே வரவேற்கிறது
சென்னை மாநகர்!

TENET




சினிமா தான் எல்லாம்னு முடிவு எடுத்த பிறகு அதுக்காக என்ன பண்ணணும்னு தெரியாது,அப்படி இருக்கையில உன்னை சுத்தி சினிமாக்காரர்களா இருக்கற மாறி பாத்துக்கனு நண்பர்கள் சொன்னதை வெச்சு சென்னை வந்த போது உலக சினிமாவும் உலக சினிமா இயக்குனர்கள் பேரா எல்லாரும் சொன்னாங்க,என்னடா இது தமிழ், மலையாள சினிமா தாண்டி வேற எதுவும் தெரியாதவனுக்கு வந்த சோதனைனு முழிச்சுட்டு இருந்தேன்.
    
    அப்ப வரைக்கும் நான் பார்த்த உலக சினிமா மகேந்திரன் சாரோட உதிரிப்பூக்கள்,பாலு மகேந்திரா சாரோட வீடு, சந்திய ராகம் அப்புறம் children of heaven ஒரு ஈரான் படம் அவ்வளவு தான்..இந்த Akira Kurosawa, Quentin Tarantino, Christopher Nolan பேரெல்லாம்‌ அப்பத்தான் கேட்கறேன்..

சரி இதெல்லாம் தெரிஞ்சு இருக்கனும் போலனு Christopher Nolan படம்‌ ஒவ்வொன்ன பாக்கும் போது என்ன இது புரியற மாறி இருக்கு புரியலயேனு திரும்ப திரும்ப பாக்க அவரோட இயக்கத்தின் மேல என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு ஒட்டிகிச்சு...

இப்ப முதல் முறையா Christopher Nolan படம் தியேட்டர்ல..
காலம் மாறினாலும்
கனவுகள் கலைந்தாலும்
கலையாதே எந்தன்
சினிமா தாகம்