சினிமா தான் எல்லாம்னு முடிவு எடுத்த பிறகு அதுக்காக என்ன பண்ணணும்னு தெரியாது,அப்படி இருக்கையில உன்னை சுத்தி சினிமாக்காரர்களா இருக்கற மாறி பாத்துக்கனு நண்பர்கள் சொன்னதை வெச்சு சென்னை வந்த போது உலக சினிமாவும் உலக சினிமா இயக்குனர்கள் பேரா எல்லாரும் சொன்னாங்க,என்னடா இது தமிழ், மலையாள சினிமா தாண்டி வேற எதுவும் தெரியாதவனுக்கு வந்த சோதனைனு முழிச்சுட்டு இருந்தேன்.
அப்ப வரைக்கும் நான் பார்த்த உலக சினிமா மகேந்திரன் சாரோட உதிரிப்பூக்கள்,பாலு மகேந்திரா சாரோட வீடு, சந்திய ராகம் அப்புறம் children of heaven ஒரு ஈரான் படம் அவ்வளவு தான்..இந்த Akira Kurosawa, Quentin Tarantino, Christopher Nolan பேரெல்லாம் அப்பத்தான் கேட்கறேன்..
சரி இதெல்லாம் தெரிஞ்சு இருக்கனும் போலனு Christopher Nolan படம் ஒவ்வொன்ன பாக்கும் போது என்ன இது புரியற மாறி இருக்கு புரியலயேனு திரும்ப திரும்ப பாக்க அவரோட இயக்கத்தின் மேல என்னையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு ஒட்டிகிச்சு...
இப்ப முதல் முறையா Christopher Nolan படம் தியேட்டர்ல..
காலம் மாறினாலும்
கனவுகள் கலைந்தாலும்
கலையாதே எந்தன்
சினிமா தாகம்

No comments:
Post a Comment