Friday, February 20, 2015

பெண்ணியம்


            பெண்ணியம்


பெண்ணே !
அன்னை பூமி,தாய் நாடு
என்றெல்லாம் உன்னைக்
கொண்டாடுகிறோம்….
ஏன்?

கங்கை,யமுனை,காவிரி
என்று உன்னை நம்பியே
உயிர் வாழ்கின்றோம்…
ஆனால் இன்று?

ஓடும் பேருந்தில் உன்னை
கொதறியது வெறிநாய் கூட்டம்
ஏன் கொதிக்கவில்லை
அன்னை பூமி?

காதல் என்ற பெயரில்
திராவகம் உற்றி கொன்றது
ஏன் சுடவில்லை
தாய்நாடு?

பாரதி கண்ட
புதுமை பெண்ணே !
உனக்கு நீதி காப்பியங்களில்
மட்டும் தானா?

ஊடகமே!
உனக்கும் உண்டு பங்கு.,
ஊடகங்களில் ஆபாசத்தை
தடுத்து நிறுத்து.,
எண்ணங்களில் தூய்மையை
தூக்கி நிறுத்து.,
பெண்கள் அனைவரும்
நம் சகோதரிகள் என்ற
எண்ணத்தை நிலை நிறுத்து..,

No comments:

Post a Comment