என் கண்ணுக்குள் கருவிழியாக...!
கவி கவியாய்
தொடுக்க - மனம்
தவ தவமாய்
தவிக்க - சொல்
சில சிலையாய்
துளிர்க்க - எண்ணம்
ஏக ஏணியாய்
ஏற்க - விழி
வினா விடையாய்
தவிக்க - நெஞ்சம்
பட படவென
துடிக்க,
யாரை துணை
நாட நான்?
நாள்தோறும் உன்
துதி பாடும் நான்?
தமிழே! தன் நிகரில்லா
தாய் தமிழே!
நினைந்து நினைந்து
நின்னை சரணைடந்தேன்!
தமிழே என்றும் என்
தாய், தமிழாக!
என் கண்ணுக்குள்
கருவிழியாக!...
No comments:
Post a Comment