Thursday, February 02, 2017

பாதுகாப்பு!

                                               பாதுகாப்பு!

விழியே! துளியும்
துயரில்லாமல்,
தனித்தமிழே! தாயாய்! 
தாரமாய்!தாரக மந்திரமாய்!

எண்ணி, எண்ணமெல்லாம் 
ஒருசேர ஒய்யாரமாய்
விடை தேடி விரைந்து 
வீணாக மாட்டேன்

என இன்று விழையும்
பொருட்டு காரணம் 
நானல்ல
என் கவியே! ,

சொல் செயல் இரண்டாக,
எண் எழுத்து நன்றாக ,
விண் மண் ஓன்றாக, 

அழிந்தாலும் என் கவியே!
என் வாழ்நாள்
பாதுகாப்பு!

No comments:

Post a Comment