Thursday, February 02, 2017

  பறக்கும் பறவைகள்

              பறக்கும் பறவைகள்


உற்று நோக்கியதில்
உண்டான உணர்விது
அதிகாலை - தொலைதூரத் 
தொடருதல்
முன் பின் முரண்பாடற்ற
முந்தலில்லாப்  பயணம்
ஏன் ஏதற்கு என்று
அறியாமலா?
வீண் என்று
விலகாமல் செல்கின்றன
சற்றும் சலிக்கா
இறக்கை விரித்து இலக்கை
நோக்கி - கூட்டிற்கு
கொண்டு செல்லுதல் ஏணோ ஒன்றுமில்லை
ஓயாது உழைப்பு
மட்டும் தினந்தோறும்
விடுமுறையற்ற
இதன் வாழ்க்கை விடைதேடும்
விடுகதையா?...

No comments:

Post a Comment