Thursday, February 02, 2017

விழியே முதல் வரி!.


                   விழியே முதல் வரி!.

ஆண்டின்
முதல் கவி,
ஏனோ உன்- விழியே
முதல் வரி.

எண்ண,
கவி வண்ணம்
தீட்ட - ஏராளம்
எண்ணங்கள் இருந்தும், 

என்னவளே முழுக்  கவி
கூறிவிட்டேன் 
இன்றே, கவி
ப் 
பாடி விட்டேன்
நன்றே ,

இனியெல்லாம் நீயே!
யாவும் கவியே!
காரணம் வேண்டுமா
சொல்லடி சிலையே?!

நித்தம் நீயேயென,
நாடி துடிக்க
நான் என் செய்வேன்
துணையே!

இனியாவது கொஞ்சல்,
கெஞ்சலுடன் தொடருமா?
பயணம்
நீங்குமா துயரம் ?

No comments:

Post a Comment