Thursday, February 02, 2017

வெளிச்சம் தந்த வெண்ணிலவே!




 வெளிச்சம் தந்த வெண்ணிலவே!

விடிந்தும் விடியாமல்,
இருந்த என் இரவில்
வெளிச்சம் தந்த
வெண்ணிலவே!


தொலைதூரம்
இருந்தாலும்,
உனை நினைக்கா நாட்களில்லை,
உனை வணங்கா நொடிகளில்லை.

ஆயிரம் நாத்திகம்
பேசினாலும் உனை
ஆண்டவனாக நிச்சயம்
நினைப்பதுண்டு!

தவமாய் தவமிருந்து
காத்து கரைகிறேன் ,
நீரில் சர்க்கரையாய்!
இன்றாவது முகம்
மலர்வாய் ,தாமரையாய்
என்று, இன்றும்!
என்றும்!..

No comments:

Post a Comment