Thursday, February 02, 2017

தமிழா ஒன்றுபடு!


                                                          
                     தமிழா ஒன்றுபடு!

ஏனோ தெரியவில்லை
ஏன் என்று புரியவில்லை
ஆண்டின் முதல் மாதம்
மட்டுமே சல்லிகட்டிற்கும்
விவசாயத்திற்கும்
பேராதரவு கிடைக்கிறது,
முகநூலில் நான்
ஆதரிக்கிறேன் என்றால்
முடிந்துவிட்டாதா
முழுவதும்?,
உழவர் களத்தில் நான்,
என்றால் நடந்துவிடுமா
அனைத்தும்?
கடிதம் எழுதினால்
மீண்டு(ம்)
கரையேறுவார்களா என்ன
மீனவர்கள்?
உள்ளூர் அரசியலே அறியா
அன்பர்களுக்கு
அனைத்திந்திய அரசியல்
புரிந்து விடுமா என்ன ?
வரி எய்ப்பால்
மலர்ந்துவிடுமா
மலரனென்ன?
நகி மாலும் நண்பரே
தாய் தமிழ் தமிழகமெங்கும்
இனியாவது பரவிடுமா என்ன?
காரணம் இல்லாமல்
கலைதுறை
காத்திடுமா என்ன?
இவையெல்லாம் புரிந்தால்
தமிழா என்றோ
விழித்திருப்போம் !
தமிழா ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு!
வீரமுடன் விழித்தெழு!

No comments:

Post a Comment