Friday, February 23, 2018

நானாகிய நான்!

நானாகிய நான்!

வெறுமனே என் மனம் இன்று,

தொடருதே தவிப்புகள் என்னுள் நின்று,

தனிமையே எனக்கு என்றும் நன்று,

தொடருவேன் மனமே உன் முன் நின்று,

விடுப்பு இல்லா கதிரவனே.!

நீயும் நானும் ஒன்று தான்..

பகல் முழுவதும் உழைத்தாலும்,

இரவு என்னாளும் விடுமுறை தான்.!

கலங்கம் இல்லா வெண்ணிலவே.!

நீயும் நானும் ஒன்று தான்..

பல கவிதைகளின் உருவகமாய் இருந்தாலும்,

ஏனோ ஒரு நாள் இருட்டு தான்.!

முடிவு இல்லா புத்தகமே.!

நீயும் நானும் ஒன்று தான்..

படிக்கும் வரை தலைமேட்டில்,

முடிந்த பின் ஏனோ குப்பைமேட்டில்.!

குணம் இல்லா கரும்பலகையே.!

நீயும் நானும் ஒன்று தான்..

உன்னுள் எழுதப்படும் எழுத்துக்கள் எராளமே,

இறுதியில் என்னவோ ஏதோ வெறுமனே.!

No comments:

Post a Comment