Friday, February 23, 2018

நீயின்றி அமையாது

            நீயின்றி அமையாது

சற்றென்று என் வாழ்வில் வந்து
விறுவிறுவென என்னுள் கலந்து
தாராளமாய் என்னை தவிடு பொடியாக
மாற்றியவளே
உன்னுடன் பேச நினைப்பதெல்லாம்
பேசியிருந்தால் என்றோ நான்
ஊமையாக அமைதி காத்திருப்பேன்
இன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லாமல்
என் தாய்மொழி ஆழம் தெரியாமல்
விழி பிதுங்கி விழித்திருக்கிறேன்
ஆயிரம் உறவுகள் என்னோடு இருந்தாலும்
உன்னையே என் கண்கள் தேடுகிறது
காரணம் என் கவியின் காரண கர்த்தா
நீயின்றி அமையாது
உன்னாலே நான்
நீயின்றி  என் வாழ்வும்
வீண்!

No comments:

Post a Comment