Wednesday, October 17, 2018

உந்நிழல் வருகையில்

ஒருசில நொடியிலும்
உயிர் தொடும் உணர்வென
பிரிவென்னும் வலியிலே
என் மனம் நெருடுதே!

இரவெனும் பொழுதிலும்
இடம் தேடும் நிலவென
உந்நிழல் வருகையில்
என் நிறம் பெருகுதே

காதலென்னும் உறவில்லே
காத்திருத்தல் சுகமென
கனவென ஆயினும்
கண்மூடி கிடந்தேனே!

No comments:

Post a Comment